சரியாக எந்த வயதில் காதல் வரலாம் தெரியுமா?: டாக்டர் ராமதாஸ் சொல்கிறார்!

Subscribe to Oneindia Tamil

Real love comes only 21 years, saya Ramadoss
மாமல்லபுரம்: 21 வயதுக்கு பின் காதலித்தால் அது காதல். ஆனால், 12, 13, 15 வயது பெண்களை காதல் என்ற பெயரில் பலாத்காரம் செய்வது எந்த வகையில் நியாயம்?. நாங்கள் தலித்களுக்கு எதிரானவர்கள் அல்ல; அவர்களுடன் நல்லிணக்கத்துடன் வாழவே விரும்புகிறோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பாமக சார்பில் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் ராமதாஸ் பேசியதாவது:

நாட்டிலேயே இளைஞர்களுக்கு கடந்த 32 ஆண்டுகளாக நல்வழி உறுதிமொழியை வழங்கி வரும் ஒரே கட்சி பாமக. வன்முறை, தீவிரவாதம், பெண்ணாசை இன்றியும், மது, புகை, சூதாட்டத்துக்கு அடிமையாகாமலும் இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு இளைஞரிடமும் உறுதிமொழி பெற்று வருகிறோம்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி திருமண வயதை எட்டாத சிறுமிகளின் வாழ்க்கை ஒருசிலரால் சீரழிக்கப்படுகிறது. இதை பாதிக்கப்பட்ட பெற்றோர்களும், நாங்களும் எடுத்துக் கூறினால் ஜாதி வெறியைத் தூண்டுவதாக காவல்துறை எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது.
தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் இச்சட்டத்தை முற்றிலும் நீக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நாங்கள் சட்டத்தை நீக்கச் சொல்லவில்லை. அதில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும், முறையாக பயன்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.

14, 15 வயது சிறுமிகளைக் காணவில்லை என்று புகார் செய்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. அவர்களுடன் சமுதாயத்தில் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.

காதல் நாடகம் என்ற பெயரில் பணம் பறிப்பதைத்தான் எதிர்க்கிறோம். காதல் புனிதமானது என்ற ஒரு சிலர் கூறுகின்றனர். நாங்கள் காதலை எதிர்க்கவில்லை. 21 வயதுக்கு பின் காதலித்தால் அது காதல். ஆனால், 12, 13, 15 வயது பெண்களை காதல் என்ற பெயரில் பலாத்காரம் செய்வது எந்த வகையில் நியாயம்? என்றார் ராமதாஸ்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன், முதலியார்-பிள்ளைமார் கூட்டமைப்பின் தலைவர் கே.ராஜன், தெலுங்கு செட்டியார் சங்க பொது செயலாளர் ராஜவடிவேலு, தேவர் கூட்டமைப்பு தலைவர் அரசகுமார் உள்பட பல்வேறு ஜாதித் தலைவர்களும், லட்சக்கணக்கான வன்னியர்களும் கலந்துகொண்டனர்.

ஆனால், தலித் அமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

முன்னதாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், காதல் என்ற பெயரில் பள்ளிகளில் பயிலும் பதினெட்டு வயதுகூட நிறைவடையாத மாணவிகளை கவர்ந்து சென்று நாடக திருமணம் செய்து பணம் பறிக்கும் செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு செய்யும்படி அவர்களை தூண்டுவது அச்சமுதாய தலைவர்கள்தான். சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் அமைப்புகளின் தலைவர்கள் அண்மைக்காலமாக வன்முறை தூண்டும் விதமாக பேசிவருவது பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+