சிவகங்கையில் மஞ்சு விரட்டில் காளைகள் தாக்கி பார்வையாளர்கள் 3 பேர் பலி, 59 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

Sivaganga temple festival: 3 killed in Manju virattu
சிவகங்கை: சிவகங்கையில் மஞ்சு விரட்டின் போது காளைகள் பார்வையாளர்களை தாக்கியதில் 3 பேர் பலியாகினர், 59 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் கண்ட்ராமாணிக்கம் கிராமத்தில் முத்து முருகையா கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி சித்திரை பவுர்ணமி தினமான நேற்று மஞ்சு விரட்டு என்னும் மாடுகளை அடக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சுமார் 350 முரட்டுக் காளைகள் சீரிப் பாயந்து வந்தன. அவற்றை இளைஞர்கள் அடக்கினர். அப்போது தவறுதலாக மாடுகள் பார்வையாளர்களை தாக்கின. இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 3 பேர் பலியாகினர். மேலும் 59 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு போதுமானதாக இருந்திருந்தால் இந்த உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+