தமிழக சமாஜ்வாடி கட்சித் தலைவர் யார்?: பாமக கூட்டத்தில் 2 'தலைவர்களும்' அடிதடி!

Subscribe to Oneindia Tamil

Ramadoss an Akhilesh yadav
சென்னை: தமிழக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் யார் என்பது தொடர்பாக இருவருக்கு இடையே அடிதடி நடந்தது. அதுவும் பாமக கூட்டத்தில்.

வன்னியர் இளைஞர் கலாசார விழாவில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் சென்னை வந்தார் சமாஜ்வாடிக் கட்சியின் உத்தரப் பிரதேச முதல்வரான அகிலேஷ் யாதவ்.

ஒரு ஹோட்டலில் நடந்த வன்னியர் இளைஞர் கலாசார விழாவில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர்கள் இருவருக்குள் அடிதடி நடந்தது.

இப்பாது இக் கட்சியின் தமிழகத் தலைவராக இருப்பவர் இளங்கோவன். இவர், முலாயம் சிங்கால் நியமிக்கப்பட்டவராம். ஆனால், தான்தான் தலைவர் என்று சொல்லிக் கொண்டு தாமோதரன் என்பவரும் செயல்பட்டு வருகிறார்.

இந் நிலையில் அகிலேஷ் பங்கேற்ற வன்னியர் விழாவில் இளங்கோவனுக்குத் தான் மேடையில் இருக்கை ஒதுக்கியிருந்தனர் பாமகவினர். இதனால் தாமோதரன் மேடையின் ஓரத்தில் செம கோபத்தில் நின்று கொண்டிருந்தார்.

விழா முடியும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்த தாமோதரன், கூட்டம் முடிந்ததும் ஆவேசம் கொண்டவராய், நான் தான் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர், எனக்கு மேடையில் இடம் தராமல் அவரை ஏன் அமர வைத்தீர்கள் என்று பாமக விழா அமைப்பாளர்களிடம் ஏகத்திற்கும் எகிறிவிட்டாராம்.

அத்தோடு மேடையில் அமர்ந்திருந்த இளங்கோவனை மேடையில் வைத்தே பதம் பார்த்துவிட்டாராம். இவர் அவரை அடிக்க, பதிலுக்கு அவர் இவரை அடிக்க, இதைப் பார்த்த பாமக நிர்வாகிகள் நம்ம கட்சி எவ்வளவோ பரவாயில்லைய்யா என்று தலையில் அடித்துக் கொண்டார்களாம்.

இந்த அடிதடி விவகாரம் இப்போது போலீஸ் ஸ்டேஷன் வரை போயிருக்கிறது.

யாருமே இல்லாத கடையில யார் டீ ஆத்துனா என்னப்பா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+