படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 68 இலங்கை அகதிகள்
Subscribe to Oneindia Tamil
மங்களூர்: படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 68 இலங்கை அகதிகள் மங்களூரில் பிடிபட்டனர்.
சென்னையில் கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட முகாம்களில் தங்கி இருந்த இலங்கை அகதிகள் 68 பேர் , கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றுள்ளனர்.
இதற்காக அவர்கள் மங்களூரில் தங்கி இருந்த போது, போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றது தெரிய வந்தது.
அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்த 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தற்போது பிடிபட்ட 68 தமிழ் அகதிகளும் மங்களூரில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிடிபட்ட தகவல் கர்நாடக போலீசார் மூலம் தமிழக போலீசாருக்கு தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications