இலங்கை சிறையில் வாடும் 56 தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு
யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடும் 56 தமிழக மீனவர்களின் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 மீனவர்கள்
ராமேசுவரத்தைச் சேர்ந்த தேவதாஸ் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர்களான மார்ட்டின், ஆரோக்கிய குரூஸ், பூவேந்திரன், அந்தோனி அடிமை ஆகியோரின் விசைப்படகுகளில் 30 மீனவர்கள் ஏப்ரல் 6-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் 30 பேரையும் இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டியதாகக் கூறி கைதுசெய்து தலைமன்னார் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர்படுத்தியபோது அனைவரையும் ஏப்ரல் 18-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது..
இந்நிலையில் அவர்களை, போலீசார் மீண்டும் ஏப்ரல் 18-ந் தேதி ஆஜர்படுத்தினர். அப்போது ஏப்ரல் 26-ந் தேதி வரை தமிழக மீனவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனால் அவர்கள் அனேகமாக விடுவிக்கப்படக் கூடும் என்ற நிலை இருந்தது. ஆனால் நேற்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி, அவர்களை மே 6-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த ராமேசுவரம் மீனவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று சாலை மறியல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
26 காரைக்கால் மீனவர்கள்
ஏப்ரல் 5-ந் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 26 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்து ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருந்தனர். நீதிமன்ற உத்தரவின்படி அவர்களையும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்கள் 26 பேரையும் மே 29-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 56 தமிழக மீனவர்களின் காவலும் நீட்டிக்கப்பட்டு சிறைவாசம் தொடர்வது தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications