தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை- தொடரும் நிபுணர் குழு ஆய்வு!

வழக்கு
விஷவாயு கசிவு ஏற்பட்டதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் 29-ந் தேதி உத்தரவிட்டது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை 30-ந்தேதி மூடப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பசுமைத் தீர்ப்பாய உத்தரவு
இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக நிபுணர் குழுவை அமைத்து கடந்த 19-ந் தேதி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த நிபுணர் குழுவின் தலைவராக சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் பி.எஸ்.டி.சாய், உறுப்பினராக அதே கல்வி நிறுவன பேராசிரியர் லெஜி பிலிப் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவுக்கு உதவி செய்ய ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் பொது மேலாளர்(சுகாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல்) டி.சுமதி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூடுதல் தலைமை பொறியாளர் (சுற்றுச்சூழல்) மோகன் நாயுடு ஆகியோரையும் பசுமை தீர்ப்பாயம் நியமித்திருந்தது,
பசுமை தீர்ப்பாயம் நியமித்த இந்த நிபுணர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 23-ந்தேதி ஆய்வு நடத்தினர். அன்றிலிருந்து தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆய்வு நடத்திய அவர்கள் இன்று 2வது கட்டமாக 4-வது நாள் சோதனையை நடத்தினர். வருகிற 29-ந்தேதிக்குள் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதால் அதற்குள் நிபுண ர்குழுவினர் அறிக்கையை தாக்கல் செய்வர்..
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications