காதல் தோல்வி: காதலன் வீட்டில் பெண் சாப்ட்வேர் என்ஜினியர் தீக்குளித்து சாவு
சென்னை: காதல் தோல்வியால் பெண் சாப்ட்வேர் என்ஜினியர் தனது காதலன் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த புவனேந்திரன் நாயரின் மகள் ஜீவா (23). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினியராக இருந்தார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராகுல் (24) சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்க்கிறார்.
ராகுல் பள்ளிக்கரணையை அடுத்துள்ள ஜல்லடியன்பேட்டையில் வீடு எடுத்துத் தங்கியுள்ளார். அவரும், ஜீவா நாயரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ராகுல், ஜீவாவுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார். இதையடுத்து ஜீவா நேற்று பெங்களூரில் இருந்து சென்னை வந்து ராகுலை சந்தித்து பேசினார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று ராகுல் ஜீவாவிடம் தெரிவித்துள்ளார். நான் குளிக்க வேண்டும் உன் வீட்டுக்கு அழைத்துச் செல் என்று ஜீவா ராகுலிடம் தெரிவித்துள்ளார். ராகுலும் அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
குளியல் அறைக்குள் சென்ற ஜீவா தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ராகுல் கதவை உடைத்து வந்து பார்த்தபோது ஜீவா உடல் கருகி பிணமாகக் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜீவாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோலை ஜீவாவே கொண்டு வந்தாரா அல்லது அவர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டதா என்ற விசாரணை நடக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications