சென்னை-பெங்களூர் டபுள் டெக்கர் ரயிலில் ஏ.சி. மக்கர்.. பயணிகள் அவதி- புகார், ரயில் தாமதம்!
சென்னை: பெங்களூரில் இருந்து சென்னை சென்ற டபுள் டெக்கர் ரயிலில் ஏ.சி வேலை செய்யாததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
சென்னை- பெங்களூர் இடையே கடந்த 25ம் தேதி முதல் டபுள் டெக்கர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று பகல் 2.40 மணிக்கு இந்த ரயில் பெங்களூரில் இருந்து புறப்பட்டது. ஆனால், அதில் சி.1, சி.5, சி.10 ஆகிய 3 பெட்டிகளில் ஏசி வேலை செய்யவில்லை. மற்ற பெட்டிகளில் ஏசி விட்டு விட்டு வேலை செய்தது.

இந்த ரயிலில் ஜன்னல்களையும் திறக்க முடியாது என்பதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மூச்சு முட்ட ஆரம்பித்த நிலையில், இந்த ரயில் மாலை 5 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தது. இதையடுத்து ரயில் தங்களை விட்டுவிட்டுப் போய்விடாமல் தவிர்க்க செயினைப் பிடித்து இழுத்துவிட்டு, சில பயணிகள் இறங்கி, ஜோலார்பேட்டை ஸ்டேசன் மாஸ்டரிடம் ஏசி விவகாரம் குறித்து புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஒரு மெக்கானிக்கு வந்து ஏசி யூனிட்டை சுற்றிச் சுற்றி வந்தார். ரெண்டு தட்டி தட்டிப் பார்த்தார். பின்னர் இதை இங்கே ரிப்பேர் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.
இதையடுத்து பயணக் கட்டணத்தைத் திருப்பித் தர ஏற்பாடு செய்வதாகவும், ஏசியை இங்கே ரிப்பேர் செய்ய வசதிகள் இல்லை என்றும் ஸ்டேசன் மாஸ்டர் கூறிவிட்டார்.
இதையடுத்து தங்களை நொந்து கொண்டு பயணிகள் மீண்டும் அந்த ரயிலில் ஏறினர். இதனால் அந்த ரயில் 20 நிமிடம் தாமதமாக சென்னைக்குப் புறப்பட்டது.
சாதாரண ரயிலில் பயணம் செய்திருந்தால் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு அனல் காற்றையாவது உடலில் வாங்கிக் கொண்டு சென்றிருக்கலாம்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications