சமையல் கேஸ் சிலிண்டர் மானியம்: அக்டோபர் 1 முதல் வங்கிகளில் வரவு

உங்கள் பணம் உங்கள் கையில்
"உங்கள் பணம் உங்கள் கையில்' என்ற திட்டத்திற்கு, முக்கியத்துவம் அளித்து வரும் மத்திய அரசு, மானிய பலன்கள் மற்றும் நிதியுதவி அனைத்தும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி மக்களுக்கு வழங்கும் மானியங்கள் அனைத்தும் நேரடியாக அவர்களின் கைகளுக்குச் சென்று சேரும் என்பது மத்திய அரசின் எண்ணம். "ஆதார்' அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள, 32 கோடி பேரில், 80 லட்சம் பேரின் வங்கிக் கணக்குகள் மட்டுமே, "ஆதார்' அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டு உள்ளன. எனவே, ஆதார் அடையாள அட்டை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, அந்த அட்டையுடன், வங்கிக் கணக்கையும்இணைக்க, பொதுத் துறை வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இப்பணியை துரிதப்படுத்தி, இவ்வாண்டு அக்டோபர் முதல், சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
9 சிலிண்டர்களின் மானியம்
9 சிலிண்டர்கள் தற்போது மானிய விலையில் கிடைக்கிறது. அதன்படி மானியத்தொகையாக, ஆண்டுக்கு, 4,000 ரூபாய், பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.
நாடு முழுவதும், 14 கோடி பேர், சமையல் காஸ் இணைப்பு வைத்துள்ளனர். அவர்களுக்கு, மானியம் மொத்தமாக வழங்கப்படுமா? மாதந்தோறும் வழங்கப்படுமா? எந்த தேதியில் வரவு வைக்கப்படும், போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
20 மாவட்டங்களில் வரவு
முதற்கட்டமாக மே மாதம், 15ம் தேதி, 20 மாவட்டங்களில், சமையல் காஸ் சிலிண்டர் மானியம், பயனாளிகளின் வங்கிக் கணக்கில், வரவு வைக்கப்பட உள்ளது. அதையடுத்து, படிப்படியாக, பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன.
முழு பணமும் செலுத்த வேண்டும்
அத்தகைய நிலையில், சமையல் காஸ் சிலிண்டரின் மொத்த விலையை, வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டி இருக்கும். அதாவது, ஒவ்வொரு முறை சமையல் காஸ் சிலிண்டர் மாற்றும்போதும், அதன் மொத்த விலையை கொடுக்க வேண்டும்.
அதுபோல, பிற மானியங்கள் மற்றும் உதவித் தொகைகளும் வரவு வைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துவதற்காக, மத்திய நிதியமைச்சர், சிதம்பரம், பெட்ரோலியத் துறை அமைச்சர், வீரப்ப மொய்லி, கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ், திட்டக் கமிஷன் துணைத் தலைவர், மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர், அடங்கிய குழுவினர் இன்று பேசி முடிவு செய்கின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications