நிலக்கரி ஊழல்: உண்மைகளை மறைக்க முயலும் அட்டர்னி ஜெனரல்: கூடுதல் அட்டர்னி பகீர் புகார்

இது தொடர்பாக வாகன்வதிக்கே ஹரின் ராவல் கடிதம் எழுதி, அந்தக் கடிதத்தை மீடியாக்களுக்கும் 'லீக்' செய்துள்ளார்.
இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டதில் நடந்த ஊழலால் நாட்டுக்கு பல லட்சம் கோடியளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியான சிஏஜி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ சார்பில் ஆஜராகி வருபவருவர் மத்திய அரசுன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலான ஹரின் ராவல்.
இந் நிலையில் இந்த வழக்குத் தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ கடந்த வாரம் 'சீல்' வைத்த உறையிலிட்டு உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது. இதை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரான ஹரின் ராவல் தான் சமர்ப்பித்தார்.
அப்போது, இந்த அறிக்கையில் உள்ள விவரங்களை மத்திய அரசை சேர்ந்த எவரும் பார்க்கவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், ஒரு பிரதமர் அலுவலக அதிகாரி, சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், ஒரு நிலக்கரித் துறை அமைச்சக அதிகாரி ஆகியோர் இந்த அறிக்கையை பார்த்துள்ளதாக சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா உச்ச நீதிமன்றத்தில் பின்னர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். இவர் போட்ட குண்டில் மத்திய அரசு வெலவெலத்துப் போய் உள்ளது.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் முழுப் பழியையும் ஹரின் ராவல் மீது போட்டுவிட்டு மத்திய அரசை, குறிப்பாக சட்ட அமைச்சரையும் பிரதமரையும் காப்பாற்றும் முயற்சிகள் மறைமுகமாக நடந்து வருகின்றன.
இந் நிலையில் தான் இந்த விவகாரத்தில் நான் பலிகடா ஆக்கப்படுவதாக ராவல் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் வாகனாவதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த மாதம் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாருடன் நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற கூட்டம், அந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்த சிபிஐ அறிக்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று அஸ்வனி குமார் கூறியது,
அஸ்வனி குமாரின் அலுவலகத்துக்கு விசாரணை அறிக்கையை எடுத்துக் கொண்டு வருமாறு தனக்கு அட்டர்னி ஜெனரல் வாகனாவதி எஸ்.எம்.எஸ். அனுப்பியது போன்ற விவரங்களை ஹரின் ராவல் தனது கடிதத்தில் விவரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ராவல் தனது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதவியையும் ராஜினாமா செய்யப் போவதாகத் தெரிகிறது.
இந்த ஊழலில் உச்ச நீதிமன்றத்திலேயே மத்திய அரசு உண்மைகளை மறைக்க முயல்வது அம்பலமாகியுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அக்கட்சி கோரியுள்ளது.
இந்த நிலையில் சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் வாகன்வதி ஆகியோர் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். சட்ட அமைச்சகமோ, பிரதமர் அலுவலகமோ எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications