ராமநவமி விழாவில் ஆபாச நடனமாடிய 3 பெண்கள் உட்பட 17 நடன கலைஞர்கள் கைது
நெல்லூர்: நெல்லூரில் பார்ப்பவர்கள் கண்கள் கூசுமாறு, ராமநவமி விழாவில் ஆபாச நடனமாடிய 3 பெண்கள் உட்பட 17 நடன கலைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பல இடங்களில் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. விழா நிறைவு நாளை முன்னிட்டு கிராமங்களில் ரிக்கார்டு டான்சுக்கு விழா குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர். டிரைவருடன் டிராக்டரை நடுரோட்டில் நிறுத்தி அதில் நின்றபடி நடன கலைஞர்கள் நடனம் ஆடினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் அறை குறை ஆடை அணிந்து ஆபாசமாக நடனமாடியுள்ளனர்.
இது பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் நடன நிகழ்ச்சி நடந்த பக்தேசலு கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஆபாச நடனமாடியதாக 17 நடன கலைஞர்களை கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் பெண்கள். மேலும் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிர்வாகியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான அனைவரும் குண்டூர், செங்கூர், நெல்லூ ரைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் இருந்து ரூ.19 ஆயிரம் பணம், 14 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
ரிக்கார்டு டான்சுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், தடையை மீறி நடனமாடியதால் கலைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் நெல்லூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரமணகுமார் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications