பர்தா அணிந்து வந்த ஆண்: பெண்ணிடம் நகை பறித்த போது முகத்திரை கிழிந்ததால் சிக்கினான்
கமுதி: கமுதி அருகே பர்தா அணிந்து, பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கடலாடி அருகே இளஞ்செம்பூர் காவல் நிலைய சரகம் பொதி குளத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ஜெயலட்சுமி(28). இவர் அதிகாலையில் வீட்டுப் பின்புறமாகச் சென்றபோது, முஸ்லீம் பெண் போல பர்தா ஆடை அணிந்து ஒருவர் , முகத்தை மறைத்வாறு நின்று கொண்டிருந்தாராம்.
அவர் திடீரென்று ஜெயலட்சுமி மீது பாய்ந்து அவரது கழுத்தில் கிடந்த நாலரை பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடி விட்டார்.நகை பறிப்பு சம்பவத்தில், பர்தா ஆடை அணிந்து வந்தவருடன் ஜெயலட்சுமி போராடி, முகத்தில் தொங்கிய பர்தா ஆடையைக் கிழித்தபோது, நகை அபகரிக்க வந்தவர் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பழனிச்சாமி(எ)கண்ணன் (28) எனபது தெரியவந்ததாம்.
சம்பவம் குறித்து இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில ஜெயலட்சுமி புகார் செய்தார். காவல் ஆய்வாளர்(பொறுப்பு) குமரன், சார்பு ஆய்வாளர் அருள் பிரகாஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, கண்ணனை தேடி வந்தார்கள்.
பின்னர், முதுகுளத்தூர்-கடலாடி சாலையில், இளஞ்செம்பூர் விலக்கு சாலை அருகே கோவில் ஒன்றின் பின்புறம் பதுங்கி இருந்த கண்ணனை போலீஸார் கைது செய்தார்கள்.கண்ணன் தந்த தகவலின் பேரில் அவரது வீட்டில் ஒளித்து வைத்திருந்த ஜெயலட்சுமியின் நகையை போலீஸார் கைப்பற்றினார்கள். முதுகுளத்தூர் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட கண்ணனை 15 நாள் காவலில் வைக்கும்படி குற்றவியல் நடுவர் சி.மோகன்ராம் உத்தரவிட்டுள்ளார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications