காலதாமதமாக கருணை மனு நிராகரிப்பு: இரட்டை கொலை வழக்கில் தூக்கை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: இரட்டைக் கொலை வழக்கு ஒன்றில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கொலையாளியின் கருணை மனுவை ஜனாதிபதி 12 ஆண்டுகால தாமதமாக நிராகரித்ததால் தூக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
வழக்கு என்ன?
அசாம் மாநிலத்தில் இரட்டை கொலை வழக்கு ஒன்றில் சரண்டரான எம்.என். தாஸ் என்பவருக்கு1997 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை 1998ஆம் ஆண்டு கவுகாத்தி உயர்நீதிமன்றமும் 1999ஆம் ஆண்டு உச்சநீதிமன்றதும் இந்த தூக்கு தண்டனையை உறுதி செய்திருந்தன. இதைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு தாஸ் தமக்கு கருணை அளிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இந்த மனுவை 2011ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் நிராகரித்திருந்தார். தமது கருணை மனுவை 12 ஆண்டு காலம் தாமதமாக ஜனாதிபதி நிராகரித்ததால் தமது தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்ஹ்டில் தாஸ் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை ஜி.எஸ். சிங்வி தலைமையிலான பெச்ஞ்ச் விசாரித்து, காலதாமதமாக கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததால் தாஸின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதாகவும் ஆயுள் தண்டனையாக மாற்றுவதாகவும் தீர்ப்பளித்தது. இதே உச்சநீதிமன்றம்தான் அண்மையில் காலிஸ்தான் இயக்கத்தின் புல்லரின் வழக்கில் கருணை மனு தாமதத்தை காரணமாக ஏற்க முடியாது என்று கூறியிருந்தது.
காலதாமதமாக கருணை மனு நிராகரிப்பு என்ற காரணத்தைக் காட்டி ராஜிவ் வழக்கில் 3 தமிழர்களும் தூக்கை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications