சேலத்தில் காந்தி சிலை உடைப்பு: போலீசார் தீவிர விசாரணை
சேலம்: சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் உள்ள மகாத்மா காந்தி சிலையை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. அந்த சிலையில் உள்ள இரண்டு கைகளும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அங்கு கூடினர். காந்தி சிலை உடைப்பு குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சேலம் போலீஸ் உதவி கமிஷனர் உதயகுமார், கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சக்தி மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் கம்பம் நடும் விழா நடந்தது. அப்போது அங்கு போதையில் வந்த ஆசாமிகள் சிலையின் கைகளை உடைத்திருக்கலாம் என்று தெரிய வந்தது.
இதனையடுத்து காந்தி சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் மகாத்மா காந்தி சிலையை உடைத்த நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும் அரசுக்கும், போலீசாருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications