மதுரை: வலியில்லாமல் குழந்தை பெற்று இதயநோயாளி சாதனை

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் இதயநோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வலியில்லாமல் குழந்தை பிறக்கவைத்து சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள்.

மதுரை மாவட்டம் முருகனேரியை சேர்ந்தவர் சீனிவாசன். தீப்பெட்டி தயாரிப்பு அலுவலகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (20). திருமணமாகி

2 ஆண்டுக்கு பின் கர்ப்பமான கிருஷ்ணவேணிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்தவாரம் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார்.

மே 28ம் தேதி அவருக்கு பிரசவ தேதி குறிக்கப்பட்டிருந்தது. மருத்துவ சோதனையில் கிருஷ்ணவேணியின் இதய ரத்தக்குழாய்களுக்கு இடையே ஓட்டை விழுந்து சுத்தம், அசுத்தம் ரத்தம் கலந்து வருவது தெரிந்தது. அவருக்கு பிரசவ வலி அதிகரிப்பால் இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம் அதிகரித்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டது.

மதுரை அரசு மருத்துவமனை இருதய நோய் டாக்டர் ஜனார்தனன் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் , வலியில்லா பிரசவ சிகிச்சை கிருஷ்ணவேணிக்கு அளித்தனர். இதையடுத்து கிருஷ்ணவேணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

மதுரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக வலியில்லா பிரசவ சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணுக்கு ஒன்றரை கிலோ எடையுள்ள குழந்தை பிறந்துள்ளது.வலி நிவாரண மருந்தை அவரின் முதுகு தண்டுவடத்தில் செலுத்தி வலி இல்லாத நிலையில், அதேநேரம் கர்ப்பப்பை சுருங்கி விரிவதை கட்டுப்படுத்தாமல் நவீன சிகிச்சை வழங்கப்பட்டது என்றார் மருத்துவமனை டீன் மோகன்.

இதற்கிடையில் மதுரை அரசு மருத்துவமனையின் வலியில்லா பிரசவ புதிய தனிப் பிரிவை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா வரும் சனிக்கிழமைதான் திறந்து வைக்கிறார். இனி பிரசவ வலியை எண்ணி குழந்தை பெற்றுக் கொள்ள இளம்பெண்கள் அச்சப்படத் தேவையில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+