கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக ப.சி. பிளான்..சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி?!

கடந்த லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் தோற்றுவிட்டதாகவே அறிவிக்கப்பட்டவர் ப.சிதம்பரம். ஆனால் எப்படியோ திடீரென வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட அது தொடர்பான வழக்கு இன்னமும் ப.சிதம்பரத்தின் தலைக்கு மேலே தொங்கும் கத்தியாக இருந்து வருகிறது. நிச்சயமாக மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பது ப.சிதம்பரத்தின் கணிப்பாக இருந்து வருகிறது. அதுவும் தமிழகத்தில் திமுகவுடனும் கூட்டணி இல்லை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது குதிரைக் கொம்புதான்.
இந்நிலையில் ப.சிதம்பரத்தையும் ஒரு பிரதமர் வேட்பாளராக சில லாபிகள் முன்னிறுத்திப் பார்க்கின்றன. ஆனால் தனக்கு பிரதமர் பதவி மீது ஆசை இல்லை என்று கூறியிருக்கும் சிதம்பரம் கட்சிப் பணியாற்றவே விரும்புகிறேன் என்று கூறிவருகிறார். மேலும் புதுச்சேரி லோக்சபா தொகுதியில் அனேகமாக சிதம்பரம் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக மீதான கடும் அதிருப்தியால் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. இதனால் ப.சிதம்பரமும் ஒரு வியூகம் வகுத்து வைத்திருக்கிறார்.
அதாவது கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையாக வெல்லும் நிலையில் அந்த மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா கோட்டா மூலம் எம்.பி.யாகிவிடுவது என்று ப்ளான் போட்டு வைத்திருக்கிறாராம் சிதம்பரம். சிவகங்கை தொகுதியில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை களமிறக்கிவிடுவது என்றும் தீர்மானித்திருக்கிறாராம் ப.சிதம்பரம்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
சிவகங்கையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுப்பு! வியந்து பார்த்த மக்கள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications