லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவல்: பிரதமரிடம் ராணுவ தளபதி விளக்கம்

சீன ஊடுருவல்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பிராந்தியம் தவுலத் பெக் ஆல்டி பகுதியில் 50 பேர் கொண்ட சீன படைப்பிரிவு கடந்த மாதம் 15-ந் தேதி நள்ளிரவு ஊடுருவியது. அந்த படையினரை இந்தோ-திபெத் எல்லை படையினர் 9 கி.மீ. தூரம் பின்வாங்கி செல்ல வைத்தனர். இருப்பினும், இந்திய பகுதிக்குள் 19 கி.மீ. தூரத்தில் சீன படையினர் கூடாரம் அமைத்து முகாமிட்டுள்ளனர். அடுத்தடுத்து 5 கூடாரங்கள் எழுப்பி உள்ளனர். 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதிக்கு இந்திய ராணுவம், தனது படைகளை அனுப்பி வைத்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
கொடியமர்வு பேச்சுகள் தோல்வி
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற 3 கட்ட 'கொடி அமர்வு' பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. சீன படைகளை திரும்பப் பெறுமாறு இந்தியா வற்புறுத்தியது. ஆனால் இதை சீனா ஏற்கவில்லை. இதற்கு பதிலாக கிழக்கு லடாக் பகுதியில் இந்திய ராணுவம் அமைத்த கட்டமைப்புகளை அழிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது சீனா. இதனால் இப்பிரச்சினையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றம்சாட்டி வருகின்றன.
பிரதமருடன் ஆலோசனை
இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் ராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங் நேற்று சந்தித்தார். அப்போது, சீன ராணுவத்தின் ஊடுருவல் குறித்தும், எல்லையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்தும் அவர் பிரதமரிடம் விளக்கி கூறினார். அதையடுத்து, பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதிலும் ராணுவ தளபதி விக்ரம்சிங் கலந்து கொண்டார். சீன ராணுவ ஊடுருவல் பிரச்சினை குறித்து விளக்கி கூறினார். அதற்கு தீர்வுகாண ராணுவம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும், தீர்வுக்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications