சிகாகோ: பரிசாக வந்த துப்பாக்கி- 5 வயது சிறுவன் விளையாட்டாகச் சுட்டதில் 2 வயது தங்கை பலி
சிகாகோ: விளையாட்டுத்தனமாக 5 வயது சிறுவன் உண்மையான துப்பாக்கியால் சுட்டதில் அவனது 2 வயது தங்கை பலியானாள். அத்துப்பாக்கி அவனுக்கு பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்கிழமை மதியம் கெண்டகியில் உள்ள ஒரு வீட்டில் 5 வயது அண்ணனும், அவனது 2 வயது தங்கையும் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களது அம்மா வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாராம். அப்போது தவறுதலாக வீட்டின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை கீழே மறந்து வைத்து விட்டார்.
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் இதை கவனித்து விட்டான். ஏனெனில் அத்துப்பாக்கி அவனுக்கு பரசாக வழங்கப்பட்ட ஒன்று. அம்மா அசந்த நேரமாக பார்த்து விளையாட்டுக்கு தங்கையை நோக்கிச் சுட்டுள்ளான். அங்கு தான் விதி விளையாடிவிட்டது. குண்டுகளால் நிரப்பப்பட்டிருந்த துப்பாக்கி உண்மையிலேயே வெடித்து விட்டது. குண்டடி பட்ட சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.
இது குறித்து அந்த அம்மா கூறும்போது, ‘ அதிகபட்சமாக மூன்று நிமிட இடைவெளிகூட இருக்காது. குப்பையை கொட்டுவதற்காக வெளியில் சென்ற நான், குண்டு பாயும் சத்தம் கேட்டு ஓடோடி வந்து பார்த்தேன். அங்கே...' என மேற்கொண்டு பேச இயலாமல் கண்ணீர் வடிக்கிறார்.
'தனக்கு பரிசளிக்கப் பட்டதால் அது தன்னுடைய பொம்மை என்ற எண்ணத்தில் சிறுவன் துப்பாக்கியை எடுத்துள்ளான். துரதிஷ்டவசமாக துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பபட்டிருக்கின்றன. மேலும் இது குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்' , என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வினையாகும் என்பதற்கோர் மற்றுமொரு உதாரணம் இச்சம்பவம். குழந்தைகளுக்கு பரிசளிக்கும் போது, என்னமாதிரியான பொருட்களை தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் மிகுந்த கவனம் தேவை. மேலும் குழந்தைகளின் கைக்கெட்டும் தூரத்தில் ஆபத்தான பொருட்களை வைக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு படிப்பினை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications