சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர் மதுரை லாட்ஜில் தற்கொலை
மதுரை: சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் மதுரை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரை சேர்ந்த லட்சுமிநாராயணன் (33) சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
லட்சுமிநாராயணனுக்கும் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந் நிலையில் அவர் மதுரைக்குச் சென்றுவிட்டார்.
இதையடுத்து லட்சுமிநாராயணனை காணவில்லை என்று தாம்பரம் போலீசில் அவரது மனைவி புகார் தந்தார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், மதுரையில் ஒரு லாட்ஜில் பிணமாகக் கிடந்தார்.
மதுரைக்கு கடந்த 1ம் தேதி வந்த லட்சுமிநாராயணன், டவுன்ஹால் ரோட்டில் ஒரு லாட்ஜில் தங்கினார். அறையில் இருந்து அவர் வெளியே வரவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தரவே அவர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார். வந்த தினமே அறைக்குள் நுழைந்த உடனேயே அவர் விஷம் குடித்ததாகத் தெரிகிறது.
அந்த அறையை போலீசார் சோதனையிட்டபோது, அவர் தன் மனைவிக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தனது முதலீடுகள், சொத்து பத்திரம் உள்ள இடம், வங்கியில் உள்ள பண விவரம், கடன் அளவு ஆகியவை குறித்து விரிவாக எழுதி வைத்திருந்தார்.
லட்சுமிநாராயணன் தற்கொலைக்கு மனைவியுடனான கருத்து வேறுபாடு தான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற விசாரணை நடக்கிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications