26/11 மும்பை தாக்குதல், பெனாசீர் கொலை வழக்குகளில் வாதாடிய பாகிஸ்தான் வழக்கறிஞர் சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கு மற்றும் 26/11 மும்பை குண்டுவெடிப்பு வழக்குகளில் ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் சவுத்ரி ஜுல்பிகர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கு மற்றும் 26/11 மும்பை குண்டுவெடிப்பு வழக்குகளில் ஆஜராகி வந்தவர் வழக்கறிஞர் சவுத்ரி ஜுல்பிகர். பெனாசீர் பூட்டோ கொலை வழக்கு தொடர்பாக அவர் ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்திற்கு இன்று அதிகாலை கிளம்பினார்.
கராச்சி கம்பெனி மார்க்கெட் பகுதி அருகே அவர் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை சுட்டனர். இந்த தாக்குதலில் அவரும், அவரது பாதுகாவலரும் படுகாயம் அடைந்தார். இருவரும் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயன்சஸில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜுல்பிகர் இறந்தார்.
ஜுல்பிகருக்கு பயங்கரவாதிகள் ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்திருந்தனர் என்று அவரது மகன் நிஸார் தெரிவித்தார். பெனாசீர் கொலை வழக்கில் ராவல்பிண்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜராகுமாறு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications