கர்நாடக சட்டசபை தேர்தல்- நாளை வாக்குப் பதிவு- பலத்த போலீஸ் பாதுகாப்பு!

கர்நாடகவில் நாளை 223 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி, பிஎஸ்ஆர் காங்கிரஸ் (ஸ்ரீராமுலு) மற்றும் இடது சாரி கட்சிகளும் தங்களது வேட்பாளரை நிறுத்தியுள்ளன.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மாசுவராஜ், வெங்கையா நாயுடு, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆகியோரும் தங்களது கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். கர்நாடக ஜனதா கட்சி வேட்பாளர்களுக்காக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பிரசாரம் செய்தார். மஜத கட்சி வேட்பாளர்களுக்காக முன்னாள் பிரதமர் தேவகவுடா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. நாளை காலை 7மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. பதற்றமான வாக்குச் சாவடிகளில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மிகவும் பதற்றமானவை என கருதப்படும் 1,110 வாக்குசாவடிகளில் வெப் கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications