அஸ்வ்னி குமார், பவன்குமார் பன்சால் ராஜினாமா இல்லை: காங்கிரஸ்

நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையில் திருத்தம் செய்த விவகாரத்தில் சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இதேபோல் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் மருமகன் சிக்கியதால் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் ராஜினாமா செய்ய வேண்டும்ன் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நேற்று 3 மணி நேரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜகவின் நெருக்கடிக்குப் பணிந்து அமைச்சர்கள் அஸ்வினி குமார், பவன்குமார் பன்சால் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டியது இல்லை என தீர்மானிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா, பாஜக ஏவிவரும் அவதூறுகளுக்கு நாம் உரிய பதில் அளிப்போம் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸின் இந்த முடிவை பாஜக கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஊழல்வாதிகளைக் காப்பாற்றுகிற மத்திய அரசை அலிபாபாவும் 90 திருடர்களும் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார். பாஜகவின் மற்றொரு தலைவரான ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில், ஊழல் அமைச்சர்களைப் பாதுகாக்கும் காங்கிரஸின் முடிவு அதிர்ச்சிக்குரியது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications