பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி?
டெல்லி: இந்தியா லடாக் பகுதியில் பதுங்கு குழிகள் அமைக்காது என்று வாக்குறுதி அளித்ததன் அடிப்படையிலேயே சீன ராணுவம் வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எல்லையில் சமாதானம் நிலவுவதால் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீன சுற்றுப்பயணம் உறுதியாகியுள்ளது.
லடாக் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீனா ராணுவம் முகாமிட்டு கடந்த 20 நாட்களாக மிரட்டல் விடுத்து வந்ததையடுத்து இந்தியாவும், வெளியுறவு அமைச்சரின் சீன சுற்றுப்பயணத்தை ரத்து செய்வோம், சீனாவுடனான உறவுகளை குறைத்து கொள்வோம் என்று அறிவித்தது.
இதனால், இருநாடுகளிடையேயான 100 பில்லியன் டாலர் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று அஞ்சப்பட்ட நிலையில் சீன ராணுவம் அங்கிருந்து வெளியேறியுள்ளது. இதன் பின்னணியில், என்ன நடந்தது என்பதில் சந்தேகமும் நிலவுகிறது..

சீனாவில் "ராகி நல்லா" ராணுவ முகாமிற்கு அருகில் உள்ள இந்தியாவின் லடாக் பகுதி "சுமர்" ராணுவம் முகாம் பகுதியில் இந்தியா கட்டிவரும் பதுங்கு குழிகள் நடவடிக்கைகளை கைவிட, சீனாவிற்கு உறுதியளித்ததை அடுத்து சீனா ராணுவம் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், எல்லையில் பதற்றம் தணிந்துள்ள நிலையில், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீனப்பயணம் உறுதியாகி உள்ளது. இதை சீன வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. சல்மான் குர்ஷித் சீனாவில் வரும் 9, 10 தேதிகளில் பயணம் செய்ய உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, ‘ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீன பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையே இந்த ஆண்டின் மிக முக்கிய உயர் மட்ட பேச்சு வார்த்தைகளில் ஒன்று நடைபெறப்போகிறது. சீனா எல்லையில் சமாதானத்தையும், அமைதியையும் நிலைநாட்ட விரும்புகிறது.
சீனாவும், இந்தியாவும் அண்டை நாடுகள். எல்லை வரையறையை இனிதான் நிறைவு செய்ய வேண்டி உள்ளது. இதன் காரணமாகத்தான் தவிர்க்க இயலாதபடிக்கு எல்லையில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன' என்றார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications