2 அமைச்சர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம்- நாடாளுமன்றம் இன்றும் முடக்கம்- லோக்சபாவில் அமளி

Subscribe to Oneindia Tamil

Lok Sabha
டெல்லி: மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் மற்றும் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டத்தில் குதித்ததால் இரு அவைகளையும் நடத்த முடியாமல் முடங்கிப் போயின.

லோக்சபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆவேசமாகப் பேசியபடி கோஷமிட்டதால் பெரும் அமளி காணப்பட்டது.

அஸ்வினி குமாரும், பன்சாலும் பதவி விலகும் வரை ஓய மாட்டோம். நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று பாஜக திட்டவட்டமாக கூறி வருகிறது. மற்ற எதிர்க்கட்சிகளும் இதே போல கூறி வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரு அவைகளையும் இயக்க முடியாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற ஸ்தம்பிப்பு தொடர்பாக விவாதிக்க கூட்டப்பட்டது. அதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அகமது படேல், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இன்று காலை முதலில் ராஜ்யசபா ஒத்திவைக்கப்ட்டது. அதேபோல லோக்சபா கூடியதும் சபாநாயகர் மீரா குமார் இருக்கை முன்பு பாஜக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் திரண்டனர். அவர்களை இருக்கைக்கு திரும்புமாறுசபாநாயகர் பலமுறை கோரியும் யாரும் போகவில்லை. இதையடுத்து சபையை ஒத்திவைத்தார் மீராகுமார்.

பிற்பகலில் மீண்டும் சபை கூடியதும் நிலைமையில் மாற்றமில்லை. இதையடுத்து லோக்சபா மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நாள் முழுவதுக்கும் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவிலும் இதே நிலைதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+