வேலியே பயிரை மேஞ்ச மாதிரி... கொள்ளையில் ஈடுபட்ட ஊர்காவல்படை வீரர்!
காரைக்கால்: நண்பரோடு கூட்டு சேர்ந்து, ஒரு இளைஞரை கடத்தி நகைகளை கொள்ளையடித்த ஊர்காவல்படை வீரரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்காலை அடுத்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகரத்தினம் பூபதி (28). இவர் தனது பைக்கில் காரைக்கால் நோக்கி சென்று கொண்டு இருந்தார். காரைக்கால் மதகடி புதிய பாலம் அருகில் சென்ற போது, திடீரென மற்றொரு பைக்கில் வந்த இருவர் நாகரத்தினத்தை வழிமறித்து, நாங்கள் காரைக்கால் போலீஸ் என கூறியுள்ளனர்.
மேலும், நாகரத்தினத்தை வலுகட்டாயமாக தங்கள் பைக்கில் ஏற்றி, காரைக்கால் கடற்கரை சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தி, நாகரத்தினத்தை மிரட்டி, அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க நகை, செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அவர்கள் தப்பியோடி விட்டனர்.
இது குறித்து, நாகரத்தினம் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், ஒருவர் காரைக்கால் திருநள்ளாறு காவல் நிலையத்தில் ஊர்காவல் படைவீரராக பணியாற்றி வரும் மகேஷ் என்றும், மற்றொருவர் அவரது நண்பர் செருமாவிளங்கையைச் சேர்ந்த சரவணன் (30) என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, ஊர்காவல்படை வீரர் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து , அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த நகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை மீட்டு, மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது நண்பர் சரவணனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
ஊர்காவல்படை வீரர் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications