ராமதாஸை விடுதலை செய்யக் கோரி பாமக செயலாளர் தற்கொலை

சேலம் மணியனூர் பாரதி நகரை சேர்ந்தவர் சின்ராஜ். 36 வயதான இவர் வெள்ளி பட்டறை தொழிலாளி. 50-வது கோட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளராகவும் உள்ளார். கட்சி பணியில் சின்ராஜ் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை அறிந்த சின்ராஜ் கடந்த சில நாட்களாக மனவருத்தம் அடைந்தார். வேலைக்கும் சரியாக செல்ல முடியாத நிலையில் சின்ராஜ் சோகமாக இருந்தார். பார்ப்பவர்களிடம் டாக்டர் ராமதாஸ் தற்போது சிறையில் உள்ளார். அவர் எப்போது விடுதலை ஆவார் என்றே தெரியவில்லை என்றும் எப்போதும் அதே நினைவாக இருப்பதாக கூறினார்.
இதற்கிடையே இன்று காலை சின்ராஜ் தற்கொலை செய்யும் நோக்கில் வெள்ளிப்பட்டறைக்கு சென்றார். அங்கிருந்த சயனைட்டை எடுத்து வந்து வீட்டில் வைத்து குடித்து விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் துடிதுடித்து அவர் இறந்து விட்டார். இதனை பார்த்த அவரது மனைவி அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து சின்ராஜ் உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட சின்ராஜுக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications