நிலக்கரி வழக்கு... அனுமதி இல்லாமல் யார்கிட்டயும் விவாதிக்கக் கூடாது: சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட்

நிலக்கரி ஊழல் வழக்கின் விசாரணையை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக மத்திய சட்ட அமைச்சர் தலையிட்டு சிலவற்றை நீக்கியதுதான் சர்ச்சையின் தொடக்கம். இது தொடர்பாக மத்திய அரசுத் தரப்பில் தொடர்ந்தும் நீதிமன்றத்தில் மறுக்கப்பட்ட நிலையில் சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவே, ஆமாம் மத்திய சட்ட அமைச்சர் இன்ன இன்ன பகுதிகளை திருத்தினார் என்றும் இதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்றும் உச்சநீதிமன்றத்தில் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்ய விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது. சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா தாக்கல் செய்த அறிக்கை மீதான இன்றைய விசாரணையில் மத்திய அரசை செம காட்டு காட்டிவிட்டது உச்சநீதிமன்றம்.
இதன் கிளைமாக்ஸாக சிபிஐயையும் பிடிபிடி என வெளுத்து வாங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். இந்த வழக்கின் விசாரணை அறிக்கையில் முக்கிய அம்சங்களை நீக்கியிருக்கின்றனர். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த ரவிகாந்த் மீண்டும் விசாரிக்க வேண்டும். நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் எவருடனும் சிபிஐ ஆலோசனை நடத்தக் கூடாது. அரசு தரப்பில் நெருக்கடி வந்தால் அவற்றை எப்படி எதிர்கொள்வது? விசாரணையை தொடர்ந்தும் துணிச்சலாக நடத்துவது எப்படி? என்பதை சிபிஐ கண்டறிய வேண்டும் என்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம் இது போன்ற நிலைமையைத் தவிர்க்க 3 யோசனைகளையும் முன்வைத்திருக்கிறது.
அதாவது நிலக்கரி வழக்கின் வழக்கின் விசாரணையை மேற்பார்வையிட ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டுமா? இந்த வழக்கில் விசாரணை நடத்த வல்லுநர் குழுவை அமைப்பது போன்ற உதவிகள் தேவையா? அத்துடன் விசாரணை நடத்தும் குழு மற்றும் சிபிஐ இயக்குநர் தவிர வேறு யாரும் விசாரணை அறிக்கையை பார்வையிடக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த கண்டிப்பைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சிபிஐ நடந்து கொள்ளும். நிலக்கரி ஊழல் வழக்கின் விசாரணையை திறம்பட நடத்துவோம் என்று சிபிஐ தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications