காதலித்தார், கற்பழித்தார், கைவிட்டுட்டார்.. போலீஸ் அதிகாரியை எதிர்த்து பெண் போராட்டம்
டேராடூன்: உ.பி மாநிலம் டேராடூனில் காதலித்து, உறவு கொண்டு விட்டு இப்போது கைவிட்டு மோசடி செய்து விட்டார் என்று மூத்த போலீஸ் அதிகாரி மீது டேராரடூனைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார். மேலும் அவருக்கு எதிராக போராட்டத்திலும் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு வெளியே அமர்ந்து அவர் போராடியதால் பதட்டம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரிகளை நேரில் சந்தித்து பலமுறை புகார் கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
அப்பெண்ணின் பெயர் முக்தா. 28 வயதான இவரின் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருப்பவர் கூடுதல் எஸ்பியின் பெயர் பர்மீந்திர சிங்.
இதுகுறித்து முக்தா கூறுகையில், என்னிடம் நட்பாக பழகினார். பின்னர் செக்ஸ் ரீதியாக என்னைப் பயன்படுத்திக் கொண்டார். பலமுறை என்னுடன் உறவு வைத்துக் கொண்டார். தற்போது என்னை உதாசீனப்படுத்துகிறார்.
அவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தேன். ஆனால் பலன் இல்லை. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனக்கு தற்போது கொலை மிரட்டல்கள் வருகின்றன. இருந்தாலும் எனது கோரிக்கை நிறைவேறும் வரை நான் போராட்டத்தை விடப் போவதில்லை என்றார்.
இந்த விவகாரம் குறித்து எஸ்.பி மமதா வோரா கூறுகையில், இந்த புகார் குறித்து மாநில அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications