தமிழ் ஈழத்திற்கான மக்கள் சக்தியே நாம் தமிழர் கட்சி- சீமான் பேச்சு!
சென்னை: தமிழீழ விடுதலையை வென்றெடுக்கவும், காவிரியில் இருந்து கச்சத் தீவு வரையிலான பல்வேறு சிக்கல்களில் தமிழரின் உரிமையை மீட்டெடுப்பதற்காகவும் மக்கள் சக்தியை திரட்டவே நாம் தமிழர் கட்சி உருவாகியுள்ளது என்று செந்தமிழன் சீமான் பேசினார்.
சென்னை தாம்பரத்தில், காஞ்சி மத்திய மாவட்டத்தின் சார்பாக, நாமே மாற்று, நாம் தமிழரே மாற்று என்ற முழக்கத்துடன் சண்முகம் சாலையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தமிழ் முழக்கம் சாகும் அமீது, கலைக்கோட்டு உதயம், அய்யநாதன், அன்புத் தென்னரசன் , வழக்கறிஞர் செ.இராசன் , நாகப்பன் ஆகியோரும் கலந்துகொண்டு தங்களது கருத்தை முன்வைத்தனர்.
இக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது :-
உரிமைகள் பறிபோகின்றன...
"தமிழினத்தின் உரிமைகள் ஒவ்வொரு நாளும் பறிபோகிறது. இதைப்பற்றி கேட்பதற்கு நாதியற்ற இனமாக தமிழினம் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் அறிக்கை அளிக்கின்ற தலைமைகள்தான் இருக்கின்றன. அறிக்கை கொடுத்து சொறிந்துவிட்டு தமிழனை ஏமாற்றும் அரசியல்தான் இங்கு நடக்கிறது. இவர்கள் விட்ட அறிக்கைகளால் ஏற்பட்ட பலன் என்ன?
முப்பாட்டன் கட்டிய அணை...
இந்த உலகிற்கு அணை என்றால் என்ன என்றே தெரியாத காலத்தில் நமது முப்பாட்டன் கரிகால் பெருவளத்தான், காவிரியின் குறுக்கே அணை கட்டி, பெருகி வந்த நீரை திருப்பி விட்டு, வறண்ட நிலங்களுக்கு பாசன நீர் கொடுத்து விவசாய உற்பத்தியை பெருக்கினான். அதனால்தான் சோழ வள நாடு சோறுடைத்து என்றானது. அந்த சோழ நாடான தஞ்சை தரணியில் இன்றைக்கு வயல்கள் காய்கின்றன. கர்நாடக அரசு நமக்குரிய நீர்ப் பங்கை அளிக்காததால், அணைகள் வறண்டு, விவசாயிகளின் வாழ்கை இருண்டு கிடக்கிறது. உணவளித்த வயலிலேயே தனது உடையால் தூக்கு மாட்டிக்கொண்டு தமிழ்நாட்டு விவசாயி சாகிறான்.
தட்டிக் கேளுங்கள்...
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு, ஏன் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கிறாய் என்று கர்நாடகத்தை அதட்டிக் கேட்கவிலை. அப்படிக் கேட்டால் கர்நாடகத்தில் அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது என்று கருதுகிறது. பா.ஜ.க. நிலையும் அதுதான். இந்த இரண்டு தேசியக் கட்சிகளும், கர்நாடகத்திலும் கேரளத்திலும் மாநிலக் கட்சிகளாகவே இருக்கின்றன. ஆனால் இங்கு மட்டும் தமிழனை இந்தியனாக இருக்க வேண்டும் என்று பேசுகின்றன. எனக்கு நீரியில்லையே என்று கேட்டால், அதற்கு பதில் இல்லை.
முல்லைப்பெரியாறு அணை...
முல்லைப் பெரியாறு அணையை உடைக்கப்போகிறோம் என்று கேரள காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்களே, அப்படி பேசாதீர்கள் என்று சொல்வதற்கும், அந்த அணை பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதி கூறுவதற்கும் ஒரு காங்கிரஸ் தலைவர் இருக்கிறாரா இந்த மண்ணில், இல்லை.
தனித்தமிழ் ஈழமே தீர்வு...
இலங்கையில் எம்மினம் சிங்கள பெளத்த இனவாத அரசினால் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. அவர்கள் பாதுகாப்புடனும் முழு அரசியல் உரிமையுடனும் வாழ வேண்டுமெனில் தனித் தமிழ் ஈழமே தீர்வு என்று நாம் கூறினால், அதனை தேசியக் கட்சிகளான காங்கிரஸூம் பாரதிய ஜனதாவும் எதிர்க்கின்றன. இந்த இரண்டு கட்சிகளை விட தமிழீழ விடுதலையை இங்குள்ள மார்க்சிஸ்ட் கட்சிதான் கடுமையாக எதிர்க்கிறது.
ஏன் கேட்கவில்லை ?
ராஜிவ் காந்தி படுகொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவர் விடுதலை பற்றி இப்போது கருணாநிதி பேசுகிறார். இன்றைக்கு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜி, தனக்கு ஆதரவளிக்குமாறு கருணாநிதியை சந்தித்த போதே, இந்த மூவருக்கும் நீங்கள் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் கருணை காட்டி தண்டனைக் குறைப்பு செய்ய வேண்டும் என்று ஏன் கேட்கவில்லை?
தமிழில் வழக்காட ஒப்புதல்...
தமிழ் மொழிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. தமிழ்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதியில்லை. தமிழ் வழக்காடு மொழியாக அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீங்கள் குடியரசுத் தலைவரான பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்கிற நிபந்தனையை பிரணாப் முகர்ஜியிடம் கருணாநிதி விதித்திருக்க வேண்டும். அப்போது செய்யவில்லை, இப்போது பேசுகிறார்.
பயிற்றுமொழி ஆங்கிலமா...?
தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி உள்ளிட்ட அரசு நடத்தும் பள்ளிகளில் மட்டுமே தமிழ் பயிற்று மொழியாக இருந்தது. அந்த நிலைக்கும் இப்போது வேட்டு வைத்துவிட்டார்கள். ஆங்கில மொழி பயிற்று மொழி என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது. இது தமிழ் மொழிக்கு செய்யும் அவமரியாதை இல்லையா?
இசைப்பிரியாவை மறந்துவிட்டீர்களா...?
தங்கள் சாதிப் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று கூறி, ஒரு தலைவர் மாமல்லபுரத்தில் இலட்சக்கணக்கில் தன் சாதியினரை கூட்டி மாநாடு நடத்துகிறார். அன்றைக்கு ஈழத்திலே இசைப்பிரியாவைப் போன்ற எண்ணற்ற நமது தங்கைகளும், அக்காள்களும் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டபோது இப்படியொரு பெரும் மாநாட்டைக் கூட்டி மருத்துவர் ஐயா அவர்கள் எதிர்ப்பு காட்டியிருந்தால் நாம் தமிழர் கட்சியே பிறந்திருக்காதே.
நாங்கள் தீவிரவாதிகளா...?
எங்களை தீவிரவாதிகள் என்று காவல் துறையைச் சேர்ந்த சிலர் பரப்புரை செய்கிறார்கள். ஜனநாயக வழியில் நின்று தமிழினத்திற்காக போராடும் எங்களைப் பார்த்து எந்த அடிப்படையில் தீவிரவாதிகள் என்கிறீர்கள்? கொலை, கொள்ளை என்று எதிலாவது நாங்கள் ஈடுபட்டதாக நீங்கள் கூற முடியுமா? தலைவர் பிரபாகரனின் படத்தை போட்டு சுவரொட்டி ஒட்டக் கூடாது என்கிறீர்கள். அது எப்படி நியாயமாகும்? எம் இனத்தின் விடுதலைக்காக போராடிய, எம் இனத்தின் மதிப்புமிக்க அடையாளம் எமது தலைவர் பிரபாகரன்.
ஜனநாயக அரசியல்...
நாங்கள் ஒட்டும் சுவரொட்டிகளை காவல் துறையினர் கிழத்து எறிகின்றனர். எதற்காக இப்படியெல்லாம் செய்கிறீர்கள்? நாங்கள் ஜனநாயக வழியில் அரசியல் செய்கிறோம். எங்களை இப்படியெல்லாம் சீண்டிணால், நாங்கள் மதிக்கும் காவல் துறையையே எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும்' என்றார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications