அமெரிக்கா: 3டி யில் உருவான முதல் பிளாஸ்டிக் (நிஜ) தோட்டா துப்பாக்கி...
நியூயார்க்: 3டி முறையில் உலகின் முதல் பிளாஸ்டிக் துப்பாக்கி உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ தோட்டாக்களைப் பயன் படுத்தி சுடலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு குழு வெற்றிகரமாக இந்த பிளாஸ்டிக் துப்பாக்கியை வடிவமைத்துள்ளது. இந்த துப்பாக்கியில் உண்மையான தோட்டாக்களை போட்டு வெற்றிகரமாக சுட்டு சோதனை செய்யப்பட்டது.
இந்த குழு, துப்பாக்கியை முப்பரிமாண அச்சு எந்திரத்தைப் பயன்படுத்தி உருவாக்கி உள்ளது.

கம்யூட்டர் உதவியுடன்...
இந்த அச்சு எந்திரங்களைக் கொண்டு கம்ப்யூட்டர் மூலம் வடிவமைக்கப்பட்ட எந்த வடிவத்தையும் திடப்பொருட்களில் உருவாக்கிட முடியும். கம்ப்யூட்டர் மூலம் துப்பாக்கியை வடிவமைத்து, இந்த எந்திரங்கள் உதவியுடன் பிளாஸ்டிக் துப்பாக்கியை தயாரித்துள்ளது.

இண்டர்நெட்ல ரிலீஸ்...
இதனை பயன்படுத்தும் விதம், அந்த எந்திரத்தைக் காட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அமெரிக்க மக்களின் ஆயுதங்கள் பயன்பாட்டு உரிமையை பாதுகாக்க இந்தக்குழு இதனை தயாரித்துள்ளதாக கூறியுள்ளது.

கண்டுபிடிக்க முடியாது...
பாதுகாப்பு சோதனைகள் நடத்தும் போது பிளாஸ்டிக் ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியாது என்று கூறி அமெரிக்க அரசு இந்தக் கண்டுபிடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

ரொம்ப ஆபத்து...
இதனை யார் வேண்டுமானாலும் இண்டர்நெட்டில் இருந்து டவுன் லோட் செய்து கொள்ளும் வசதியினை இந்த இணையதளம் வழங்கியிருப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.












Click it and Unblock the Notifications