ஹிமாச்சல் பிரதேசத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 32 பேர் பலி
சிம்லா: ஹிமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று, ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹிமாச்சலின் அணி பகுதியில் இருந்து சுமார் 60 பயணிகளுடன் குளு பகுதிக்கு நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஜிரி என்ற இடத்திற்கு வந்த போது எதிர்பாரத விதமாக கவிழ்ந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இதில் பேருந்தில் பயணம் செய்த 32 பேர் பலியாகினர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு குளு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. இன்னும் பலர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications