பெல்ஜியம் ஏர்போர்ட்டில் சூரத் வைரத்தை கொள்ளையடித்த கும்பல்..3 நாடுகளில் 31 பேர் கைது!

ஐரோப்பிய நாடுகளை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ள சம்பவம் இது. பிப்ரவரி 8ம் தேதி பெல்ஜியம் நாட்டின் விமான நிலையம் ஒன்றில் ஜூரிச் செல்வதற்கு ஒரு விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் சூரத்திற்கு கொண்டு செல்வதர்காக வைரக் கற்கள் ஏற்றப்பட்டிருந்தன. இந்த வைரத்தை வெட்டி, பாலிஷ் செய்து திரும்பக் கொகண்டு வருவதற்காக விமானத்தில் அவை ஏற்றப்பட்டிருந்தன.
அப்போது அங்கு திமுதிமுவென போலீஸ் சீருடையில் பலர் வந்தனர். வைரக் கற்கள் ஏற்றப்பட்டிருந்த ஹெல்வெடிக் ஏர்வேஸ் விமானத்திற்குள் புகுந்த அவர்கள், 50 மில்லியன் டாலர் மதிப்பிலான வைரக் கற்களை துப்பாக்கி முனையில் அபகரித்தனர். பின்னர் அதிரடியாக தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் பெல்ஜியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து 250க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் கொள்ளையர்களைப் பிடிக்க நியமிக்கப்பட்டனர். இவர்கள் பெல்ஜியம், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பிரிந்து சென்று தீவிர வேட்டையில் குதித்தனர். இதன் விளைவாக இதுவரை 31 பேர் சிக்கியுள்ளனர்.
பிடிபட்டவர்களிடமிருந்து வைரத்தில் சில பகுதியையும், திருட்டுப் போன பணத்தின் ஒரு பகுதியும் சுவிட்சர்லாந்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. திருட்டு்ப போன வைரத்தில் 90 சதவீதம் ஆன்ட்வெர்ப்பில் உள்ள இந்திய வைர வியாபாரிகளுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இவர்கள் சூரத்திலிருந்து வந்து பெல்ஜியத்தில் செட்டிலானவர்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் 24 பேர் பெல்ஜியத்தில் சிக்கினர். 6 பேர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பிரான்சிலிருந்து வந்த ஒருவரும் இந்தக் கொள்ளை தொடர்பாக சிக்கியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications