காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தற்காலிக குழு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில் இதை நிறைவேற்றுவதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. தமிழக அரசின் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த 7-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுத்த மாதம் தமிழகத்தில் பயிர் சாகுபடி காலம் தொடங்க உள்ளதால், காவிரி நதி நீரை அளவிட்டு வழங்குவதற்கு ஒரு பங்கீட்டு அமைப்பு தேவை என்றும் வாதிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் தேதியை வரும் இன்றுக்குள் அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழக அரசு மனு மீதான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் முடிவில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் வரை தற்காலிக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியும் இருந்தது. இதை ஏற்று தற்காலிக குழு ஒன்றை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இந்த தற்காலிக குழுவுக்கு மத்திய நீர்வளத்துறை செயலர் தலைவராக செயல்படுவார். இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில தலைமைச் செயலர்கள் இடம்பெறுவர் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இதில் ஆட்சேபனை எதுவும் இருந்தால் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications