ஆந்திராவில் கலகலக்கும் அரசியல் கால்குலேஷன்! கிரண்குமார்= ஷெட்டர்? ஜெகன் = எதியூரப்பா+ஸ்ரீராமுலு?

Subscribe to Oneindia Tamil

Karnataka encore sought in AP
ஹைதராபாத்: அண்டை மாநிலமான கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிந்ததும் தான் பாக்கி.. ஆந்திர மாநிலத்தில் கோடை வெயிலைவிட அரசியல் தலைவர்கள் போட்டுப் பார்க்கும் பொலிட்டிக்கல் கால்குலேஷன்கள் இருக்கிறதே...உஷ்... அப்பாடா!

கர்நாடகாவில் ஆண்ட பாஜக தோற்றுப் போனது. பாஜகவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி கண்ட எதியூரப்பாவும் ஸ்ரீராமுலுவும் செல்லுபடியாகவில்லை.... பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு நடுவே மதச்சார்பற்ற ஜனதா தளம் தமது ஒக்கலிகா பெல்ல்ட்டில் வெளுத்துக் கட்டி எதிர்க்கட்சியாக உருவெடுத்துவிட்டது...ஒருவழியாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் போகிறது..

இந்த கர்நாடக தேர்தல் முடிவுகளை ஆந்திர அரசியல் கட்சிகளும் தங்களுக்குத் தகுந்தார் போல் மாற்றி சொல்லும் கால்குலேஷன் இருக்கிறதே... தாங்க முடியலைப்பா....

கர்நாடக மாநில பாஜகவை ஊழல் கட்சியாக அடையாளப்படுத்தி மக்கள் காங்கிரஸ்தான் நல்ல கட்சி என வாக்களித்திருக்கின்றனர்..இதனால் ஆந்திர மாநில மக்களும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிப்பர் என்று சொல்கிறார் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சத்யநாரயணா.

ஆனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவர் ஷோபா நாகிரெட்டியோ, கர்நாடகாவில் பாஜகவை மக்கள் எப்படி ஆட்சியில் இருந்து அகற்றினார்களோ அதேபோல்தான் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை அகற்றி எங்களை ஆட்சியில் உட்கார வைப்பர் என்று சொல்கிறார்.

மற்றொரு கட்சியான தெலுங்குதேசம் சொல்லுகிற கால்குலேஷன் என்ன தெரியுமா? கர்நாடகாவின் ஆளும் பாஜகவைப் போல ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி மண்ணைக் கவ்வும்.. கர்நாடகாவின் பாஜகவில் இருந்து பிரிந்து போன எதியூரப்பா, ஸ்ரீராமுலு தோல்வியைத் தழுவிய போல காங்கிரஸ் இருந்து பிரிந்து போன ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இடம் தெரியாமல் போகும்.. ஆந்திர மக்கள் தெலுங்கு தேசத்துக்கே வாக்களித்து ஆட்சியில் அமர்த்துவர் என்கிறார்....

ஆஹா! இப்பவே கண்ணை கட்டுதே!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+