ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த குழந்தை: சிறு காயங்களுடன் தப்பிய அதிசயம்
தர்மபுரி: ஓடும் பேருந்தில் இரவு நேரத்தில் தாயின் மடியில் உறங்கிய குழந்தை படியில் உருண்டு விழுந்து உயிர் தப்பியுள்ளது. இந்த அதிசய சம்பவம் தர்மபுரியில் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா பேருந்து ஒன்றில் மேட்டூர் டேம் பகுதிக்கு சென்றிருக்கின்றனர். அன்று மாலையே மேட்டூரில் இருந்து கர்நாடகா மாநிலம் கே.ஆர்.பி அணையை பார்க்கும் திட்டத்தோடு கிளம்பியிருக்கிறார்கள்.
அந்த சுற்றுலா குழுவில் உஷா என்ற பெண்ணும் அவரது 10 மாத கைக் குழந்தையான ஸ்ரீவாணியும் இருந்திருக்கிறார்கள். உஷா தன் குழந்தையுடன் பேருந்தின் படியோரத்தில் உள்ள சீட்டில் அமர்ந்து பயணித்திருக்கிறார்.
பகலில் மேட்டூர் அணை, பூங்கா, அணை முனியப்பன் கோவில் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்த உஷா அசதியில் தூங்கிவிடவே, இரவு 9 மணியளவில் மடியில் உறங்கிக் கொண்டிருந்த ஸ்ரீ வாணி நழுவி படி வழியாக கீழே உருண்டு விழுந்து விட்டாள். அப்போது பேருந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை கடந்திருக்கிறது. அவ்வழியே சென்ற உள்ளூர் பெண் ஒருவர் குழந்தை விழுந்ததைப் பார்த்து போலீஸுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
லேசான காயங்களுடன் அழுது கொண்டிருந்த குழந்தையை உடனடியாக மீட்ட போலீஸார் தர்மபுரி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தையின் உடலில் பயப்படும்படியான பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.
கே.ஆர்.பி அணைக்கு சென்ற பிறகு தான் உஷா தன் குழந்தையைத் தேடியிருக்கிறார். பதறிப்போன அனைவரும் குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்க. ஒருவழியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தை இருப்பதை தெரிந்துகொண்டு பதறியடித்து வந்து சேர்ந்தனர். முழுவதும் குணமடைந்துவிட்ட ஸ்ரீவாணியை அவரது பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். ஓடும் பேருந்தில் இருந்து உருண்டு விழுந்தும் உயிர் தப்பிய அதிசய குழந்தையை ஏராளமானோர் மருத்துவமனையில் பார்த்துச் சென்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications