காடுவெட்டி குரு மீது மீண்டும் பாய்ந்தது தேசிய பாதுகாப்பு சட்டம்!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடலூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பழைய வழக்கு ஒன்றில் தேடப்படும் குற்றவாளி என அறிவித்து சென்னை எம்.எல்.ஏ. விடுதியில் பாமகவின் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டார். அவர் மீது வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அடுத்தடுத்து போடப்பட்டது. அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அன்புமணிக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்து நேற்று வெளியே வந்தார். இன்று ஆளுநரை நேரில் சந்தித்து எங்கள் மீது தொடர்ந்தும் வழக்குப் போடுகிறார்கள் என்று புகார் மனு கொடுத்துவிட்டு வந்தார். அதே நேரத்தில் ராமதாஸுக்கும் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததால் அவர் நாளை விடுதலையாகக் கூடும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு சென்னை புழல் சிறையில் உள்ள குருவிடம் இன்று வழங்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications