Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐ.மு.கூட்டணி அரசில் ஊழலால் உருண்ட அமைச்சர்களின் தலைகள்

Subscribe to Oneindia Tamil

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் இருந்து ஊழல் புகாரினால் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால், சட்ட அமைச்சர் அஸ்வானி குமார் ஆகியோர் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

கடந்த 2009 மே மாதம் 20 ம் தேதி ஐ.மு.கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றது. நான்கு ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில் இதுவரை அமைச்சர் பதவி வகித்த பல அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடங்கி நிலக்கரி ஊழல் விசாரணை அறிக்கையில் மாற்றம் மாற்றம் செய்தது வரை பல ஊழல் குற்றச்சாட்டுகள் இந்த அமைச்சர்கள் மீது எழுந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி உருண்ட அமைச்சர்கள் யார் யார் என்பதை மேற்கொண்டு படியுங்கள்.

ஸ்பெக்ட்ரம் ராசா

ஸ்பெக்ட்ரம் ராசா

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் புகார் இந்தியாவையே உலுக்கியது. 1,76ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து திமுகவைச் சேர்ந்த அ.ராசா, கடந்த 2010 ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

தயாநிதி மாறன் பதவி விலகல்

தயாநிதி மாறன் பதவி விலகல்

திமுகவைச் சேர்ந்த அமைச்சர் தயாநிதி மாறன், ஐ.மு.கூட்டணி அமைச்சரவையில் ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவரும் ஸ்பெக்ட்ரட் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாகவே பதவி விலக நேரிட்டது.

2006 -2008 ஆண்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த தயாநிதி மாறன் ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கவில்லை. ஆனால் அந்த நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மாக்ஸிஸ் நிறுவனம் வாங்கியவுடன், உடனடியாக ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கிடைத்தது. மாறன்தான் இதன் பின்னணியில் இருப்பதாக ஏர்செல் நிறுவன முன்னாள் தலைவர் சிவசங்கரன் குற்றம் சாட்டினார். இதையடுத்து தயாநிதி மாறன் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் பதவி விலகினார்.

வீரபத்திர சிங்

வீரபத்திர சிங்

மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக வீரபத்ர சிங் தனது பதவியை கடந்த ஆண்டு ராஜினாமாச் செய்தார். 78 வயதாகும் வீரபத்ர சிங் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஹிமாசலப் பிரதேச முதல்வராக 5 முறை பதவி வகித்துள்ளார்.

1989-ம் ஆண்டு ஹிமாசல முதல்வராக இருந்தபோது, தொழிலதிபர்களுக்கு தொழில் தொடங்க நிலம் ஒதுக்க பணம் தர வேண்டுமென்று வீரபத்ர சிங் அவர்களிடம் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது மனைவி பிரதிபா சிங், ஐ.ஏ.எஸ். அதிகாரி மொஹிந்தர் லால் ஆகியோர் உடனிருந்ததாகத் தெரிகிறது. இதனால் பதவி விலகினார். ஆனால் இப்போது மீண்டும் ஹிமாச்சல பிரதேச முதல்வராக இருக்கிறார்.

சசி தரூர் ஐ.பி.எல் ஊழல்

சசி தரூர் ஐ.பி.எல் ஊழல்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பதவி வகித்த சசி தரூர் ஊழல் புகாரில் சிக்கி பதவியை இழந்த முதல் அமைச்சர் என்ற பெருமை பெற்றவர். ஐ.பி.எல் கொச்சி அணியில் இவரது தோழி சுனந்தாவிற்கு தொடர்பு இருப்பதாக எழுந்த ஊழல் புகாரையடுத்து இவர் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரலில் தனது பதவியை இழக்க நேரிட்டது.

பவன் குமார் பன்சால்

பவன் குமார் பன்சால்

ரயில்வேயில் உயர் பதவியை பெற மகேஷ் குமார் என்ற உயர் அதிகாரி, ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் சகோதரி மகன் விஜய் சிங்லாவை பிடித்தார். இதில் ரூ.10 கோடி பேரம் பேசி முடிக்கப்பட்டது. முதல் தவணையாக விஜய் சிங்லாவிடம் மகேஷ் குமாரின் பிரதிநிதி மஞ்சுநாத் ரூ.90 லட்சம் வழங்கியபோது சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களை மடக்கிப்பிடித்தனர். இந்த பணி நியமனம் தொடர்பான பேரம் ரயில்வே மந்திரி பன்சால் வீட்டில் வைத்து நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் பதவியை நேற்று இரவு ராஜினாமா செய்தார் பவன்குமார் பன்சால்.

ஊழல் அறிக்கை திருத்தம்

ஊழல் அறிக்கை திருத்தம்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் அறிக்கையில் திருத்தம் செய்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார் தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

நிறைவு செய்யுமா?

நிறைவு செய்யுமா?

ஐ.மு.கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்றதைத் தொடர்ந்து பல ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ளது. கூட்டணியில் இருந்து பல கட்சிகள் தங்களின் ஆதரவை விலகிக் கொண்டுள்ளன. பலர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டுள்ளது. இந்த முறை ஐ.மு.கூட்டணி அரசு ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்யுமா? அதற்குள் இன்னும் எத்தனை அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் கிளம்பும் என்பது தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+