காதல் முறிந்தது ..காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திகொண்ட காதல் ஜோடி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம்:

சிக்மகளூரை சேர்ந்த சசிதரும் மற்றும் ரேஷ்மியும் ஆகிய இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் பெங்களூரை அடுத்த மடிவாளா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்து வந்தனர்.

இந்த காதல் ஜோடிக்கிடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமான ஒன்று. அதேபோன்று தான் நேற்று காலையிலும் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஆத்திரம் அடைந்த இருவரும் திடீரென்று ஒருவருக்கொருவர் கத்தியால் குத்தி கொண்டனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

காயமடைந்த இருவருக்கும் இதுவரை சுயநினைவு திரும்பவில்லை. மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சசிதர், ரேஷ்மிக்கு இடையேயான காதல் முறிந்து விட்டதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் கொலை முயற்சி நடந்து உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் காதலர்களுக்கு சுயநினைவு திரும்பிய பிறகுதான் உண்மையான காரணம் தெரியவரும் என்று அவர்கள் கூறினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+