கர்நாடக தேர்தலில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கலையே: குமாரசாமி கண்ணீர்
Subscribe to Oneindia Tamil

மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கர்நாடக சட்டசபை தேர்தலில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை. நான் தனி ஆளாக போராடினேன்.(கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பேசினார்) நான் எதிர்கட்சி தலைவராக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்தை மதிக்கிறேன். இதற்கு முன்பு எதிர்கட்சித் தலைவர்களாக இருந்த ஹெச்.டி. தேவே கௌடா, எதியூரப்பா மற்றும் சித்தராமையா ஆகியோரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்படுவேன்.
எதிர்கட்சிகள் என்றால் இப்படித் தான் நடக்க வேண்டும் என்றுள்ள நடைமுறையை மாற்றி சிறந்த எதிர்கட்சி தலைவராக விளங்குவேன். 6 மாதத்தில் அரசின் நடைமுறைகள் தெரிந்துவிடும். அதனால் அரசுக்கு 6 மாத கால அவகாசம் அளிப்பேன். அதுவரை எந்த விமர்சனமும் செய்ய மாட்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications