பிள்ளைய வித்தேன், பாதிக் காசு கொடுத்தாங்க, மீதிக்காசு தரலை.. போலீஸில் புகார் செய்த அப்பா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தனது 2 மாத ஆண் குழந்தையை 60,000க்கு விற்றார் ஒரு தந்தை. குழந்தையை வாங்கியவர்கள் பாதிப் பணத்தை மட்டுமே கொடுத்ததால், போலீஸில் போய்ப் புகார் கூறினார். போலீஸார் இரு தரப்பையும் கடுமையாக எச்சரித்து, குழந்தையை மீட்டு பெற்றோரிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு வந்தார். அங்கு ஒரு புகார் கொடுத்தார். அந்தப் புகாரைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

ஸ்ரீதர், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் ஆவார். இவரது மனைவிக்கு 2 மாதங்களுக்கு முன்பு இரட்டைக் குழந்தை, ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதில் ஒரு குழந்தையை,கே.கே.நகரைச் சேர்ந்த மொய்தீன் என்பவருக்கு விற்க முடிவு செய்தார் ஸ்ரீதர். ரூ. 60,000 கொடுத்து குழந்தையை வாங்க முடிவானதாம்.

ஏப்ரல் 18ம் தேதி முதல் தவணையாக ரூ.25,000 கொடுத்துள்ளார் மொய்தீன். பின்னர் குழந்தையைக் கொடுத்தார். ஆனால் மீதப் பணத்தை மொய்தீன் தரவில்லையாம். இதனால் கோபமடைந்த ஸ்ரீதர் தனது குழந்தையை மீட்டுத் தர வேண்டும் என்று கோரி காவல் நிலையம் வந்து புகார் கொடுத்தார்.

உடனடியாக செயல்பட்ட போலீஸார் குழந்தையை முதலில் மீட்டனர். பின்னர் இரு தரப்பினரையும் அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+