விஷமத்தனங்களுக்கு பலியாகி விடக்கூடாது - வீரபாண்டி மகனுக்கு கருணாநிதி அட்வைஸ்

வீரபாண்டி ராஜாவின் மகள் டாக்டர் மலர்விழிக்கும், டாக்டர்செந்திலுக்கும் சென்னையில் இன்று திருமணம் நடந்தது. கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், நான் பல ஆண்டுகள் சேலத்தில் கலை உலக வாழ்க்கை வாழ்ந்தவன். அன்று இருந்த சேலத்திற்கும் இன்றைய சேலத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு காரணம் வீரபாண்டி ஆறுமுகம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சேலத்தில் உள்ள இரும் பாலை, புதிய புதிய சாலைகள் அமைக்கப்பட்டு நகரமே மாறி இருக்கிறது என்றால் ஒவ்வொரு காரியத்துக்கும் காரணம் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் தான். எல்லோரும் எப்போதும் அவரை சேலத்தின் சிங்கம் என்று வர்ணித்தார்கள். ஆனால் பழைய காலத்து சேலத்தையும் இன்றைய சேலத்தையும் பார்த்தால் அதற்கு யார் காரணம் என்று ஆராய்ந்தால் அதற்கு வீரபாண்டி ஆறுமுகம்தான் காரணம் என்று சொல்லலாம்.
எனவே அவரை சேலத்து சிற்பி என்பது பொருத்தமாக இருக்கும். அப்படிப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் இல்ல மண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவதில் பெருமைபடுகிறேன். அரசியல் ரீதியாக சமூக ரீதியாக, குடும்பத்தில் சில விஷமத்தனங்களை ஏற்படுத்தலாம். தம்பி ராஜா போன்றவர்கள் அதற்கெல்லாம் பலியாகி விடாமல் தந்தை எந்த அளவு பற்றும், பாசத்துடனும் பணியாற்றினாரோ அதே போல் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
-
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக












Click it and Unblock the Notifications