மகாசேன் வலு 'இழந்துட்டாராம்': இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான மகேசன் புயல் வலுவிழந்து, தற்போது வடமேற்கு திசை நோக்கி நகர்வதாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில், சென்னையில் இருந்து 1200 கிலோ மீட்டர் தூரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தீவிர புயலாக வலுப்பெற்ற அந்த புயலுக்கு மகாசேன் என்று பெயர் சூட்டப்பட்டது. ஏற்கனவே இந்த புயல் வட மேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப்புயல் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்வதால் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு குறைவாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Maha sen weakens, may move to Bangladesh

தற்போது இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி செல்வதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒடிசா மாநிலத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தாஸ்டிதார் தெரிவித்துள்ளார்.

இதனால் அம்மாநில மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், " மகாசேன் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 850 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு வடகிழக்கு திசைக்கு மாறி நகர்ந்து வங்கதேசம் மற்றும் மியான்மர் நோக்கி செல்லும்.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக வட மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம் " என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+