கர்நாடகாவில் 'சாதிக் கடலில்' மூச்சடக்கி முத்தெடுத்த காங்கிரஸ்!
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் பல்வேறு சாதி, சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் பிரச்சனைகளை எந்த கட்சி தீர்க்கும் என்பதை பார்த்தே வாக்களித்துள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் சாதிகள், சமூகங்களின் வாக்குகளை வைத்து தான் ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது மறுபடியும் நிரூபணமாகியுள்ளது. கர்நாடகாவில் கடந்த 1960ல் இருந்து சாதிய அரசியல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேவராஜ் அர்ஸுக்கு பிறகு தற்போது சித்தராமையா தான் முஸ்லிம்கள், ஓ.பி.சி.க்கள்(இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) மற்றும் தலித் மக்களின் தலைவராக உருவெடுத்துள்ளார்.
காங்கிரஸைச் சேர்ந்த தேவராஜ் அர்ஸ் ஓ.பி.சி.க்கள் மற்றும் தலித் மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் ஆதரவோடு கர்நாடக முதல்வரானார். தனது ஆட்சியில் நில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார் அர்ஸ். இந்த சீர்திருத்தங்கள் நிலங்களை கட்டி ஆண்ட வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு மரண அடியாக விழுந்தது. இரண்டாவது இந்த சீர்திருத்தங்கள் ஓ.பி.சி.க்கள் மற்றும் தலித் மக்கள் பொருளாதார மேம்பாடு அடைய உதவியது.

வீக்கான வாக்கு வங்கி
1978ல் அர்ஸ் ஓ.பி.சி.க்கள் மற்றும் தலித் மக்களுக்கு அதிக டிக்கெட்டுகளை கொடுத்தார். பிற இடங்களில் காங்கிரஸ் தோற்றாலும் கர்நாடகாவில் மட்டும் ஆட்சியைப் பிடித்தது. அர்ஸ் காங்கிரஸை விட்டு வெளியேறிய பிறகு அந்த கட்சியின் வாக்கு வங்கி வீக்கானது. இந்த நேரத்தில் தான் ராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்ஆர் பொம்மை மற்றும் தேவே கௌடா போன்றோர் ஆட்சிக்கு வந்தனர்.

வொக்கலிகர்களின் ஆதரவு
ஆனால் 1989ல் லிங்காயத் மற்றும் வொக்கலிகாக்களின் ஆதரவோடு காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தது. சாதிய அரசியல் தேவே கௌடாவின் ஜனதா கட்சி இரண்டாகப் பிரிந்தபோது தான் வெளிப்படையாகத் தெரிய வந்தது.

எதியூரப்பா பக்கம் போன லிங்காயத்துக்கள்
இதையடுத்து வொக்கலிகாக்கள் மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கும், லிங்காயத்துகள் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் ஆதரவாக இருந்தனர். ஐக்கிய ஜனதாதளத்தில் ஜேஹெச் பட்டேல் மற்றும் ஹெக்டே இறந்த பிறகு லிங்காயத்துகள் தங்கள் சாதியைச் சேர்ந்த எதியூரப்பா இருக்கும் பாஜக பக்கம் சாய்ந்தனர்.

பிற்படுத்தப்பட்டோர்
வொக்கலிகாக்களின் ஆதரவோடு மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி 2004ம் ஆண்டு தேர்தலில் 58 இடங்களில் வெற்றி பெற்றது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்தபோது சித்தராமையா இதர பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவை பெற்றார். ஆனால் அவர் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸுக்கு வந்தபோது இதர பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவும் காங்கிரஸுக்கு கிடைத்தது.
கடந்த 5ம் தேதி நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் யார், யார் எந்தெந்த கட்சிக்கு வாக்களித்தார்கள் என்று பார்ப்போம்.

குமாரசாமி கட்சிக்கு வொக்கலிகாக்கள் ஓட்டு
குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு வொக்கலிகா சமூக மக்கள் வாக்களித்துள்ளனர்.

குழம்பிப் போன லிங்காயத்துகள்
லிங்காயத்து சமூக மக்கள் பாஜக மற்றும் எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சிக்கு வாக்களித்தனர்.

காங்கிரஸுக்கு முஸ்லீம், தலித்துகள் வாக்கு
முஸ்லீம்கள், ஓ.பி.சி.க்கள் மற்றும் தலித் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications