சாமியாருக்கு எதிராக போராட்டம் - வன்முறையில் 3 பேர் பலி
ரோடக்: மடாதிபதி ஒருவரை அப்பதவியிலிருந்து நீக்கக் கோரி ஹரியானா மாநிலம் ரோடக் மாவட்டத்தி்ல வன்முறை வெடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கரோதா என்ற இடத்தில் இந்த வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய அந்த சாமியாரின் பெயர் ராம்பால் மகாராஜ். இவர் ஆர்ய சமாஜ் மடத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவர் வேதங்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டு வருவதாக குற்றம் சாட்டுகிறார்கள் மக்கள்.
இதுகுறித்து போராட்டத்தில் குதித்தவர்களில் ஒருவர் கூறுகையில், ராம்பாலை நீக்கக் கோரி நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம். ஆனால் போலீஸார் எங்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கினர். இதில் போராட்டம் நடத்திய பலரும் காயமடைந்தனர் என்றார்.
கடந்த 2006ம் ஆண்டு ராம்பால் கற்பழிப்பு, கொலை மற்றும் வன்முறை உள்ளிட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டவர். பின்னர் 2008ம் ஆண்டு அவர் ஜாமீனில் விடுதலையானார்.
இதையடுத்து மீண்டும் அவர் ஆசிரமத்திற்குத் திரும்பினார். ஆனால் இதை பக்தர்கள் விரும்பவில்ல. கிராமத்தினரும் போராட்டத்தில் குதித்தனர். நேற்று அனைவரும் திரண்டு ஊர்வலமாக ஆசிரமம் நோக்கிக் கிளம்பினர். இது வன்முறையில் முடிந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications