சென்னையில் ராத்திரியில் பேயாட்டம் ஆடிய மழை... 17ம் தேதி கரையைக் கடக்கிறது மகாசேன்
சென்னை: சென்னை உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களில் நேற்று இரவு சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. மகாசேன் புயலின் தாக்கத்தால் பெய்த இந்த மழை இன்றும் நீடிக்கும் எனத் தெரிகிறது. மேலும் மாசேன் புயல் தற்போது சென்னைக்கு 850 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே வருகிற 17ம் தேதி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக் கடலில் மகாசேன்
வங்கக்கடலில் ஏற்பட்டிருந்த மகாசேன் புயல் வேகமாக வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது நேற்றைய நிலவரப்படி சென்னையிலிருந்து 850 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.
இு தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து 36 மணி நேரத்தில் வட கிழக்கு திசையில் நகரும். பின்னர் மே 17ம் தேதி வாக்கில் அது வங்கதேசதம் - மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை
இந்தப் புயல் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று சென்னையில் காலையிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமமாக காணப்பட்டது. ஆனால் மழை காணப்படவில்லை. ஆனால் இரவில் பலத்த சூறைக் காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்து விட்டது.
குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் கன மழை கொட்டியது. இடியும், காற்றுமாக மழை பெய்ததால் மக்கள் புயல் நம்ம ஊர் பக்கம் திரும்பி விட்டதோ என்று பீதியடைந்து விட்டனர்.
இன்று காலையில் புறநகர்ப் பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை காணப்பட்டது.
நாகையி்ல் 2ம் எண் புயல் கூண்டு
புயல் சின்னம் காரணமாக நாகை துறைமுகத்தில், 2ம் எண், எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வேலூரிலும் பலத்த காற்று மழை
சென்னையைப் போலவே வேலூரிலும் பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இதில் 50 வீடுகள் சேதமடைந்தது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் மாலை, 6 மணியில் இருந்து இரவு, 10 மணி வரை திருப்பத்தூர், ஆம்பூர், பேர்ணாம்பட்டில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.இதில் பேர்ணாம்பட்டு ஏரி குத்தி, அம்பேத்கார் நகர் மற்றும் ஆம்பூரில் உள்ள, 50 குடிசை வீடுகள் கடுமையான சேதம் ஏற்பட்டது. 10 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தது.
பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். வருவாய்த்துறையினர் மீட்பு பணிகள் செய்து வருகின்றனர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications