மின்சார கோபுரம் சரிந்து விழுந்து வாலிபர் பலி
கயத்தாறு: கயத்தாறு அருகே சூரியமினுக்கனில் மின்சார கோபுரம் சரி்ந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயத்தாறு அருகே கங்கணாக்கிணற்றை சேர்ந்த மாரியப்பன் மகன் மூர்த்தி. காளிமுத்து மகன் ரமேஷ், மற்றும் ஜெயக்குமார்.இவர்கள் மூன்று பேரும் நாகர்கோவிலை சேர்ந்த காண்டிராக்டர் சிங்கராஜ் என்பவர் மூலம் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மின்சார டவரில் வேலை பார்த்து வந்தனர்.
கயத்தாறு அருகே சூரியமினுக்கன் வழியாக செல்லும் டவரில் மூன்று பேரும் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரவிதமாக அவர்கள் நின்று கொண்டிருந்த டவர் சரிந்து விழுந்தது. இதில் மூர்த்தி, ரமேஷ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் 60 அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்தனர்.
படுகாயம் அடைந்த மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூர்த்தி அங்கு இறந்தார்.
படுகாயம் அடைந்த ரமேஷ் மற்றும் ஜெயக்குமார் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கயத்தார் இன்ஸ்பெக்டர் பொன்னரசு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக காண்டிராக்டர் சிங்கராஜ் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய மேஸ்திரி பாலசுப்பிரமணியத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications