ஏன் அம்மா மதுபானக் கடை என்று பெயர் வைக்க வேண்டியதுதானே... விஜயகாந்த் கேள்வி

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
திருப்பூர்: தொட்டதற்கெல்லாம் அம்மா, அம்மா என்று சொல்கிறீர்களே, அதைப்போல அம்மாவின் மதுபானக்கடை என்று போடுங்களேன் பார்த்துவிடுவோம். ஏன் அதற்கு மட்டும் டாஸ்மாக் என்று வைக்கிறீர்கள். அவர்கள் போட்டோவுடன் அம்மாவின் மதுபானக்கடை என்று வையுங்கள் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

திருப்பூரில் பின்னலாடைத் தொழிலை மேம்படுத்த வலியுறுத்தியும், மின்வெட்டைக் கண்டித்தும் நேற்று மாலை பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பேசினர்.

விஜயகாந்த் பேசுகையில், பேரணி நடத்த இருந்தோம். காவல்துறை கேட்டதற்கு இணங்க பேரணி வேண்டாம் என்றோம். ஏனென்றால் நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். எனக்கு எத்தனை போலீஸ் பாதுகாப்பு கொடுத்தார்கள். எனது கட்சியின் தொண்டர் படைதான் பாதுகாப்பு கொடுத்தார்கள்.

என்னுடைய பேச்சு முன்னப் பின்ன இருக்கும். விஜயகாந்த்துக்கு பேச தெரியாது என்று சொல்லுகிறார்கள். அதைப்பற்றி கவலையில்லை. எனக்கு ஜெயிக்கத் தெரியும்.

எனது மனைவி சொன்னதுபோல, தொட்டதற்கெல்லாம் அம்மா, அம்மா என்று சொல்கிறீர்களே, அதைப்போல அம்மாவின் மதுபானக்கடை என்று போடுங்களேன் பார்த்துவிடுவோம். ஏன் அதற்கு மட்டும் டாஸ்மாக் என்று வைக்கிறீர்கள். அவர்கள் போட்டோவுடன் அம்மாவின் மதுபானக்கடை என்று வையுங்கள்.

நீங்கள் சட்டத்தை மதிக்க வேண்டும். கோர்ட் என்ன சொன்னது. நீதியரசர்கள் என்ன சொன்னார்கள். ஹைவேயில் உள்ள 500 மதுபான கடையை எடுங்கள் என்று சொன்னார்கள். எடுத்தீர்களா. அந்தக் கடையை எடுத்து ஊருக்குள் வைக்கிறார்கள். ஏன் மூட வேண்டியதுதானே. ஒரு நாளைக்கு 2 ஆயிரம், 3 ஆயிரம் கோடி வருமானம் வராது. வராமல் போகட்டுமே.

20 கிலோ அரிசி இலவசமாக கொடுக்கிறோம் என்கிறார்கள். 20 கிலோ அரிசி போதுமானதா. அந்த அரிசி தரமானதா. கிலோ 20 ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறோம் என்கிறாக்ள். ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து ரூபாய் 20க்கு விற்கிறார்கள். அந்த திட்டம் தோல்விடையந்தது.

இலவசம் இருக்கும் வரை ஜெயலலிதா இருப்பார். வேலை கொடுப்பதாக சொல்கிறீர்களா. தாலிக்குத் தங்கம் கொடுப்பதாக சொல்கிறீர்கள். ஆடு, மாடு கொடுப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் வேலை கொடுப்பதாக சொல்கிறீர்களா. புதிய வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளீர்களா. உருவாக்கவில்லை என்றார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+