நவாஸ் ஷெரீப் யார்...?

பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த 66 ஆண்டு கால வரலாற்றில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட எந்த அரசும் 5 ஆண்டுகள் நீடித்தது கிடையாது. ஆனால் தற்போதுதான் பாகிஸ்தான் மக்கள் கட்சி 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடைபெற்றது. மிக மோசமான வன்முறை, குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி 125 இடங்களைக் கைப்பற்றியது. இம்ரான்கானின் கட்சி 35 இடங்களிலும் ஆளும் கட்சி 32 இடங்களிலும் வென்றுள்ளன.இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் பிரதமராக 3வது முறையாக நவாஸ் ஷெரீப் பொறுப்பேற்க இருக்கிறார். அந்த நாட்டின் வரலாற்றில் தேர்தல் வாக்களிப்பு மூலம் பிரதமர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
லாகூரில் கடந்த 1949ஆம் ஆண்டு பிறந்த நவாஸ் ஷெரீப் தொழிலதிபராக இருந்தவர். முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜியா உல் ஹக்கின் ஆதரவில் அரசியலில் குதித்தார். பஞ்சாப் மாகாணத்தின் நிதி அமைச்சராகவும் முதல்வராகவும் பொறுப்பு வகித்தவர். 1990இல் பாகிஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்றார். மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்த பின், ஊழல் புகாரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் 1997இல் நவாஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் 2 ஆண்டுகள்தான் நீடிக்க முடிந்தது. 1999இல் முஷாரப் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டார். அதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட நவாஸ், விடுதலையானதும் சவூதியில் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்து 2007இல் பாகிஸ்தான் திரும்பினார். பாகிஸ்தான் மக்கள் கூட்சியுடன் கூட்டணி அமைத்து, முஷாரபை ஆட்சியில் இருந்து வெளியேறச் செய்தார். பேநசீர் புட்டோ கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அனுதாப அலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் நவாஸ்.,
நவாஸ் ஷெரீப் 1999ல் தாம் ஆட்சியை விட்டு அகற்றப்பட்டபோது இந்தியாவுடன் இருந்த உறவுகளை மீண்டும் ஏற்படுத்த விரும்புவதாக ஏற்கெனவே கூறியுள்ளார். 1998ல் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது இந்தியா அணுகுண்டுச் சோதனையை நடத்தியது. அதற்குப் பதிலடியாக பாகிஸ்தானும் அணுகுண்டுச் சோதனையை நடத்தியது. இதனால் பதற்றம் ஏற்பட்டபோதும், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த வாஜ்பாயுடன் இணைந்து ஷெரீப் பணியாற்றினார். நவாஸ் ஷெரீப் ஆட்சிக்காலத்தில் தான் கார்கில் போரும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications