துபாய் கருத்தரங்கில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அதிகாரிகள் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் வணிக மேலாண்மை குறித்த கருத்தரங்கு 09.05.2013 அன்று நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் பரோடா வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் அலுவலர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் துணைப் பொது மேலாளர் எம். குணசேகரன் மற்றும் பிராந்திய மேலாளர் செந்தில் ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து ஈடிஏ அஸ்கான் மனிதவள மேம்பாட்டுத்துறை எக்சிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் அவர்களையும் சந்தித்து கீழக்கரையில் விரைவில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக் கிளை திறக்கப்பட இருப்பது குறித்தும் அவ்விழாவில் பங்கேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சியின்போது வங்கியின் துபாய் பிரதிநிதி விருதுநகர் சந்திரசேகரும் உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications