வரதட்சணை வழக்கில் கைதாகி 10 வருடம் ஜெயிலில் இருந்த 107 வயது கைதி மரணம்
லக்னோ: இந்தியாவின் வயது மூத்த கைதியான 107 வயது ராம்காளி மரணமடைந்தார். இவர் வரதட்சணை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் புலன்ந் சாகர் ஜெயிலில் வரதட்சணை வழக்கில் கைதான 107 வயது கைதி ராம்காளி என்பவர் அடைக்கப்பட்டு இருந்தார். 2002-ம் ஆண்டு கோர்ட்டு தண்டனை விதித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புலன்ந்சாகர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அப்போதே அவரது வயது 97.
தள்ளாத வயதிலும் அவர் 10 ஆண்டுகளாக ஜெயில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் 107 வயதான அவருக்கு நேற்று ஜெயிலில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அருகில் உள்ள மீரட் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராம்காளி அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பிரேத பரிசோதனைக்குப்பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயில் கைதிகளில் இவர்தான் மிக அதிக வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications